Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
One Mystery

Read more about curiosity

One Mystery

Read more about curiosity

  • Home
  • About us
  • Contact Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Home
  • About us
  • Contact Us
  • Privacy Policy
  • Terms & Conditions
Close

Search

Subscribe
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
Unsolved mysteries tamil

இதுவரை உலகில் யாருமே படிக்க முடியாத ஒரு மர்ம புத்தகம்..அப்படி என்ன இருக்கிறது அதில்..😳The voyinech manuscript

By admin
June 18, 2026 3 Min Read
0
>The voyinech manuscript

உலகில் இதுவரை யாருமே படிக்க புரிந்து கொள்ள முடியாத ஒரு புத்தகம் தான் இந்த The voyinech manuscript

       இது இன்னைக்கு yale University la Beinecke Rare Book and Manuscript Library ல பத்திரமா வச்சு பாதுகாத்து கொண்டிருக்கிறார்கள்..

Yale university ..

New Haven, CT

    பொதுவா சினிமால ஒரு படம் பார்க்க போன அந்த படத்துக்கு டைரக்டர் யாரு,ஹீரோ யாரு, ஹீரோயின் யாரு,என்ன மொழி , அப்டின்னு இதுல ஒண்ணு ரெண்டாவது அந்த படத்த பத்தி தெரிஞ்சு வச்சிருப்போம்…

 But இந்த புத்தகத்த பற்றி நம்ம தெரிஞ்சுகிரலம்னு நெனச்சா…

    இந்த புத்தகத்த பத்தி இதுவரைக்கும் நம்ம தெரிஞ்சுக்கிட்ட விஷயம்னு பார்த்தா 1% கூட இல்ல

ஏன்னா

     இந்த book ah எழுதுனவர் யாருனு தெரியாது..

      என்ன மொழியில எழுதிருக்காருனு தெரியாது.

     எதுக்காக எழுதினார், எது சம்பந்தமா எழுதினார் எதும் நமக்கு இப்போ வரைக்கும் தெரியாது.

       இதுனால  நமக்கு என்ன use என்றும்  இது வரைக்கும் தெரியாது.

        1912-ல இந்த book நம்ம கைக்கு கிடைச்சுச்சு ஆனால் நூறு வருடம் கடந்தும் இப்போ உள்ள modern science ah வச்சும் கூட இப்போ வரைக்கும் இந்த புத்தகத்த பற்றி நமக்கு ஒன்னும் தெரியாது…

    இரண்டாம் உலக போரின் போது இருந்த code detectors முதற்கொண்டு இப்போ உள்ள நவீன AI தொழில்நுட்பதினாலு கூட இதுவரை கண்டுபிடிக்கமுடியல.

The Voynich Manuscript சுமார் 1404 ஆண்டிலிருந்து 1438 ஆண்டுகளுக்கு இடையில் உருவாக்கப்பட்டது என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

இந்த புத்தகம் மாட்டு தோலினால் செய்யப்பட்ட புத்தகம் என்றும்,இந்த புத்தகத்திற்கு இன்று சுமார் 580–620 ஆண்டுகள் பழைமை உள்ளது.

Oplus_131072

எனவும்,கார்பன் dating மூலமாக கண்டுபிடித்தனர்..

       இடையில் சில பேர் இதை நான் decode செய்துவிட்டேன் என கூறி உரிமை கொண்டாடினாலும் பின்னாளில் அவர்கள் கூறிய கூற்று தவறானது என்று தான் நிரூபணமானது

இந்த புத்தகத்தை கண்டுபிடித்தவர்…

               1912-ல் பழைய புத்தக விற்பனையாளர் Wilfrid Voynich இந்த புத்தகத்தை வாங்கியதால அவரோட பேரிலேயே “Voynich Manuscript” ன்னு பெயர் வச்சாங்க.

    உலகில் இதுவரை யாருமே தெரிந்து கொள்ள முடியாத இந்த புத்தகத்தை பற்றி நம்ம இன்னும் தெரிஞ்சுக்கலாம்…வாங்க..

இதில் வினோதமான மருத்துவ தாவரங்கள் , குளியல் தொட்டிகளில் nude ஆக குளிக்கும் பெண்களின் வரைபடங்கள் மற்றும் வினோத குறியீடுகளும் உள்ளன.

வினோத தாவரங்கள்..

வினோத தாவரங்கள்னு பாத்திங்கன இரண்டு மூணு வகையான தாவரங்களின் அதாவது ஒரு செடியோட இலை,மற்றொரு செடியோட வேர் அப்புறம் மற்றொரு செடியின் பூ , தண்டுனு ஒண்ணா இணைச்சு வச்ச மாறி இருக்கும்.

சுருக்கமா சொல்லனும்னா நல்ல ஒரு அவதார் படத்துக்குள்ள போன மாறி இருக்கு…😁👌

விண்வெளி படங்கள்..

              அதுக்கப்புறம் விண்வெளி படங்கள்னு பார்த்தா…விண்வெளில கூட இந்த அளவுக்கு வினோதமா இருக்குமான்ற மாறி அந்த அளவுக்கு இது கற்பனையா , இல்ல உண்மையிலே இருக்குதா அப்டின்ற அளவுக்கு வரைந்து வச்சுருக்காங்க..

ராசி மற்றும் ஜோதிடம்..

              விண்வெளிகுள்ள போயிட்டாலே அடுத்த topic என்ன ராசி நட்சத்திரம் தான..

           அதேமாரி ராசி நட்சத்திரம் மற்றும் ஜோதிடங்கள்லா சொல்ற மாறி பல வரைபடங்கள வரைந்து வச்சுருக்காங்க.

            ஒவ்வொரு ராசியை சுற்றியும் நிர்வாணமான பெண்கள் வரைபடங்கள் வரையப்பட்டுள்ளன.

         இந்த book எழுதுணவரே மறுபடியும் first la இருந்து இந்த book ah படிச்சு பார்த்தார்னா அவருக்கே புரியுமான்றது கொஞ்சம் சந்தேகதா😂

போல…🤔

மருத்துவ மூலிகைகள் தயாரிப்பு…

             இன்னும் சில பக்கங்களில் மருத்துவ மூலிகைகள் தயாரிப்பு பற்றிய வரைபடங்கள் உள்ளன

            மருந்துகுடுவைகள்,செய்முறை போன்ற மருத்துவ குறிப்புகளும் இருக்கிறது

           இதிலும் நிர்வாணமான பெண்கள் வரைபடங்களுடன் மரங்களுக்கு நடுவிலிருந்து நீர் அதற்குள் பெண்கள் என்று ஒரு வினோதமான பல வரை படங்கள் இருக்கிறது.

எழுத்து மற்றும் குறியீடுகள்…

           இதில் உள்ள எழுத்துகள் எந்த மொழியிருந்தும் உருவெடுத்தது என்றில்லாமல்

            தமிழ் மொழிக்கு 247 எழுத்துகள், ஆங்கிலத்திற்கு 26 எழுத்துகள் என்பது போல இந்த மொழிக்கு 25 எழுத்துகள் இருக்கின்றன என்பனபோல் கணிக்கிறார்கள்

              அதோடு ரகசிய குறியீடுகள் போன்றவைகளும் அதிகமாக காணப்படுகின்றன…

         இந்த புத்தகத்தில் முக்கியமான விஷயம் என்ன வென்றால் பக்கம் முழுவதும் பெண்களை பற்றி மட்டுமே குறிப்புகளும் வரைபடங்களும் இருப்பதால் இதனை பெண்களின் வாழவியலுக்காக எழுதப்பட்ட புத்தகமாக இருக்கலாம் என பல வல்லுனர்களும் கருதுகிறார்கள்..

MYTHS…

             அதோடு இந்த புத்தகத்தை பற்றி நிறைய வதந்திகளும் உருவெடுத்தது.

              இது பூமியில் உள்ள எந்த மொழியிலும் ஒத்து போகவில்லை அதனால் alien 👽 ல் எழுதப்பட்ட புத்தகமாக இருக்கலாம் என்று சிலர் சொல்லுகிறார்கள்.

           புத்தகத்தில் உள்ள வினோத குறியீடுகள் இதை மந்திரம் மற்றும் சூனிய புத்தகம் என்றும் சொல்லுகிறார்கள்.

            மற்றும் அழிந்து போன atlantis அறிவு இருப்பதாகவும்..

          பின்பு வேண்டுமென்ற பணக்காரர்களை ஏமாற்றுவதற்காக அர்த்தமே இல்லாத எழுத்து மற்றும் குறியீடுகள் உருவாக்கப்பட்ட புத்தகம் என்றும் பல கருத்துகளை முன் வைக்கிறார்கள்.

         யாராலும் படிக்க முடியாததால் இது சாபம் பெற்ற புத்தகம் என்றும் கூறுகிறார்கள்.

        சரி OK எது என்னவாக இருந்தாலும் இந்த புத்தகத்தை பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க ..இப்ப வரைக்கும் decode பண்ண முடியாத புத்தகத்த நீங்க decode பண்ணி பாக்குறீங்களா..future la உங்க பேரும் வரலாறுல வரட்டும்😉

           சரி இந்த புத்தகத்தை பற்றி உங்களோட கருத்த comment sec- ல சொல்லிட்டு போங்க…

https://www.holybooks.com/wp-content/uploads/Voynich-Manuscript.pdf?utm_source

Read more: இதுவரை உலகில் யாருமே படிக்க முடியாத ஒரு மர்ம புத்தகம்..அப்படி என்ன இருக்கிறது அதில்..😳The voyinech manuscript

Author

admin

Follow Me
Other Articles
Next

66 வருஷமா தீர்க்க முடியாத மரணம்(மர்மம்)..Dyatlov Pass Incident

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

© 2026 1Mystery. All Rights Reserved.

Home | About Us | Contact Us | Privacy Policy | Terms & Conditions
Copyright 2026 — One Mystery. All rights reserved. Blogsy WordPress Theme