66 வருஷமா தீர்க்க முடியாத மரணம்(மர்மம்)..Dyatlov Pass Incident
Dyatlov Pass Incident…
உலகில் இதுவரை எத்தனையோ மர்ம சம்பவங்கள் இருந்தும் இந்த Dyatlov Pass incident innum பேசுபொருளாக உள்ளதன் காரணம் என்ன தெரியுமா..
Dyaltov என்ற college student தலைமையில் மலையேறும் அனுபவமுள்ள 9 பேரும் எரிய மலைதான் Kholat syakhl என்ற மலை அன்றைக்கு night என்ன ஆச்சுன்னே தெரியமா 9 பேரும் கோரமாக இறந்ததும்.
அதன் காரணம் இன்னைக்கும் யாருக்கும் தெரியல அதுதா இந்த சம்பவத்தின் ஆர்வத்தை தூண்டுது..
நல்லா மலையேற தெரிஞ்ச 9 பேரும் இறந்தது எப்படி… எப்டி இவ்ளோ கோரமா இறந்தாங்க வாங்க பாக்கலாம்..
நடந்தது என்ன…
Dyaltov தலைமையில மொத்தம் போனது 10 பேர் அதுல ஒருவர் மட்டும் உடம்பு சரி இல்லனு பாதிலையே பயணத்த நிறுத்திட்டாரு..
அவரு போக மிச்சம் உள்ள 9 பேரும் மலை ஏறினாங்க அதில் இரண்டு பெண்களும் இருந்தாங்க..
அப்டி மலை ஏறின 9 பேரும் பல நாட்கள் திரும்ப வராததால மீட்பு குழு அவுங்கள தேடி போச்சு அப்டி போன மீட்பு குழு கண்டது…
கூடாரம் உள்ளே இருந்து கத்தியினால் வெட்டப்பட்டிருந்தது.அதன் வழியாக அவர்கள் வெளியே போன காலடி தடங்கள் இருந்தன.
காலடி தடங்களை follow பண்ணி போய் பார்த்தபோது முதல் இருவர் ஒரு மரத்தின் கீழ் நிர்வாணமாக இறந்து கிடந்தனர்.

அதிலிருந்து இன்னும் கொஞ்ச தூரத்தில் இன்னும் 3 பேர் சரியான shoes 👟 செருப்பு எதும் இல்லாம அரைகுறை ஆடையோடு இறந்து கிடந்தனர்.
மீதமுள்ள 4 பேர் இன்னும் சில நாட்களுக்கு பிறகே கண்டு பிடிக்கப்பட்டனர்..
அவர்கள் முதல் 5 பேர் இறந்து கிடந்த திசைக்கு எதிர் திசையில்(opposite direction) ல கொஞ்சம் தொலைவில் இறந்து கிடந்தனர் .

இங்கதா mystery ஆரமிக்குது..
அந்த 4 பேர் ஒருவர் தலை உடைந்தும்,ஒருவர் மார்பில் மனிதர்களை விட பலமான அரக்கன் தாக்கியது போல பலமான காயமும்,
ஒரு பெண்ணின் நாக்கு காணப்படவில்லை. சிலரின் கண்களும் இல்லை.
இங்கு தான் இது மர்மத்தை தந்தது.பல ஆய்வுகள் நடந்து.
பணி சரிவு கடுங்குளிரால் இறந்தார்கள் என ஆய்வு சொன்னாலும் சிறிய அணில்களும் முயல்கள் கரடிகள் வாழ்ந்தாலும் மனிதர்களை தாக்க கூடிய அளவிற்கு பெரிய உயிரினங்கள் வாழ தகுதியற்ற குளிர் மலையில் காயங்களுடன் இறந்து கிடந்தது எப்படி என்றும்
அப்படி பெரிய மிருகங்கள் தாக்கிய கடித்ததற்கான தடயங்கள் இல்லாததும் கேள்வியாக உள்ளது.
மற்றும் அங்கு இருக்க கூடிய அந்த கரடிகள் தாக்கியதற்கான தடயங்கள் அடையாளங்கள் கூட இல்லை என்பதே உண்மை.

பல வருடங்களாக கூறப்பட்ட காரணங்கள்..
1. Avalanche Theory( பனிச்சரிவு கோட்பாடு)
சிறிய அளவிலான பனிச்சரிவு கூடாரத்தை பயமுறுத்தியதால், அவர்கள் வெளியேறியிருக்கலாம்.
2. Katabatic Wind..
மிகவும் கடுமையான குளிர் காற்று மற்றும் சரியாக பார்வை தெரியாமல் குழுவினர் திசை மாறியிருக்கலாம்.
3. Military Experiment..
சோவியத் இராணுவத்தின் ரகசிய சோதனைகள் காரணமாக இந்தச் சம்பவம் நடந்ததாக சிலர் நம்புகின்றனர். ஆனால் இதற்கு உறுதியான ஆதாரம் இல்லை.
. UFO அல்லது Yeti
இது ஏதோ ஏலியன் மற்றும் பணிகளில் வாழும் புராண பெரிய அரக்க உயிரினங்களால் நடந்திருக்கும் என்று பொதுமக்கள் மத்தியில் சுவாரஸ்யமான கதைகள் பரவியது.ஆனால் எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை.
தற்போதைய நிலை..
2020 – 2021 இல் நடந்த ஆய்வுகளில் கூட கடுங்குளிர் மற்றும் பனிச்சரிவு இதற்கு காரணம் என கூறினாலும் இதுவரை முழுமையான தகவல்கள் தெரியவில்லை.
ஏன் இன்னும் இது Mystery-வே இருக்கு?
- கூடாரம் ஏன் உள்ளே இருந்து கிழிக்கப்பட்டது?
- ஏன் அவர்கள் போதுமான ஆடைகள் போடாமல் வெளியவந்தனர்?
- சிலருக்கு மட்டும் ஏன் நாக்கு வெட்டப்பட்டு,கண்கள் பிடுங்கப்பட்ட கடுமையான காயங்கள்?
- சம்பவம் நடந்த சரியான நேரம் என்ன?
இது போல் பல கேள்விகளுக்கு பதில் இன்னும் தெரியாதது தான் Dyaltov Pass incident தீர்க்கப்படாத Unsolved Mystery ஆக இருக்கிறது.
முடிவில்…
இது வெறும் மர்ம கதையல்ல,இது உண்மையில் நடந்த ஒரு கொடூர துயர சம்பவம்.
இயற்கை சீற்றம் தான் இதற்கு காரணம் என ஆய்வுகள் கூறினாலும் முழுமையாக என்ன நடந்தது என்று சரியான எந்த ஆதாரங்களும் இல்லை எனவே,இது இன்றும் பெரிய Unsolved Mystery-ஆக இருக்கிறது.