ZODIAC KILLER – THE REAL SERIAL KILLER இன்று வரை தீர்க்க முடியாத தொடர் கொலை குற்றவாளி..
Zodiac killer அறிமுகம்..
உலக வரலாற்றில் பல கொலை வழக்குகள் நடந்திருக்கு. அதுல சில குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு தண்டனையும் பெற்றனர்.
ஆனால் சில வழக்குகள் மட்டும் வருஷங்கள் கடந்தும் மர்மமாகவே இருக்கிறது. அவற்றில் மிகவும் முக்கியமான ஒன்று Zodiac Killer வழக்கு.
1960-களின் இறுதியில் அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் தொடங்கிய இந்த தொடர் கொலைச் சம்பவங்கள், சாதாரண குற்றச் செயல்களாக ஆரம்பித்தாலும், பின்னர் உலகம் முழுவதையும் அதிர்ச்சியை வரவழைத்தது
. ஆனால், இந்தக் கொலைகளைச் செய்த நபர் காவல்துறைக்கு மட்டுமல்ல, செய்தித்தாள்களுக்கும் நேரடியாக கடிதங்கள் அனுப்பி, தனது செயல்களை ஒப்புக்கொண்டதுடன், யாராலும் எளிதில் புரிந்துகொள்ள முடியாத குறியீட்டு செய்திகளையும் (Cipher) அனுப்பினார்.
இன்று வரை அந்தக் கொலையாளியின் உண்மையான அடையாளம் தெரியவில்லை. பல சந்தேக நபர்கள் விசாரிக்கப்பட்டாலும், உறுதியான ஆதாரம் எதுவும் கிடைக்காததால் இந்த வழக்கு இன்னும் தீர்க்கப்படாத மர்மங்களில் ஒன்றாக உள்ளது.
Zodiac Killer யார்?

Zodiac Killer” என்பது காவல்துறை வைத்த பெயர் அல்ல. அந்தக் கொலையாளி தன்னைத் தானே “Zodiac” என்று கூறி வைத்து கொண்டது.
அவர் அனுப்பிய கடிதங்களில் ஒரு வட்டத்திற்குள் சிலுவையைப் போன்ற சின்னத்தை பயன்படுத்தியிருந்தார்.
அதுவே பின்னர் அவரது அடையாளச் சின்னமாக மாறியது.
அவருடைய கடிதங்கள் வெறும் வாக்குமூலங்களாக இல்லாமல்.ஒவ்வொரு கடிதத்திலும் காவல்துறைக்கு சவால் விடும் வார்த்தைகள், செய்தித்தாள்களை மிரட்டும் எச்சரிக்கைகள், மற்றும் குறியீட்டு புதிர்கள் இருந்தது.
இதனால் அவர் ஒரு சாதாரண தொடர் கொலையாளி அல்ல; திட்டமிட்டு கவனத்தை ஈர்க்க விரும்பிய நபர் என்ற எண்ணம் உருவானது.
முதல் தாக்குதல் – 20 டிசம்பர் 1968
1968 டிசம்பர் 20-ஆம் தேதி இரவு, கலிஃபோர்னியாவின் Benicia அருகிலுள்ள Lake Herman Road பகுதியில் காதலர்கள் இருவரும் காரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.
அவர்கள் 17 வயதான David Faraday மற்றும் 16 வயதான Betty Lou Jensen.அமைதியாக இருந்த அந்த இரவு சில நிமிடங்களில் கொடூரமான சம்பவமாக மாறியது.
அடையாளம் தெரியாத ஒருவர் துப்பாக்கியுடன் வந்து இருவரையும் சுட்டார்.David Faraday சம்பவ இடத்திலேயே இறந்தார்.
Betty Lou Jensen தப்பிக்க முயன்றபோதும் சுடப்பட்டு சில தூரத்தில் உயிரிழந்தார்.அந்த நேரத்தில் காவல்துறை இதை ஒரு சாதாரண இரட்டைக் கொலை எனக் கருதியது.
ஆனால் இதுவே பின்னர் அமெரிக்க வரலாற்றில் மிகவும் பிரபலமான தொடர் கொலை வழக்கின் முதல் அடி என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.
இரண்டாவது தாக்குதல் – 4 ஜூலை 1969
முதல் தாக்குதலுக்குப் பிறகு சில மாதங்கள் அமைதியாகக் கடந்தன. பின்னர் 1969 ஜூலை 4-ஆம் தேதி Vallejo நகரின் Blue Rock Springs Park பகுதியில் மற்றொரு தாக்குதல் நடைபெற்றது.
Darlene Ferrin மற்றும் Michael Mageau காரில் அமர்ந்திருந்தபோது, ஒரு கார் அருகில் வந்து நின்றது. சில நொடிகளில் துப்பாக்கிச் சூடு தொடங்கியது.
Darlene Ferrin கடுமையாக காயமடைந்து பின்னர் உயிரிழந்தார். Michael Mageau பல குண்டுகள் பாய்ந்தபோதும் உயிர் தப்பினார். அவர் அளித்த விளக்கம், பின்னர் விசாரணையில் முக்கிய ஆதாரமாக அமைந்தது.
இந்தச் சம்பவத்திற்குப் பிறகுதான், முதல் தாக்குதலும் இரண்டாவது தாக்குதலும் ஒரே நபரால் செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் காவல்துறைக்கு ஏற்பட்டது.
“This is the Zodiac speaking.”
அந்தக் கடிதங்களில், இரண்டு தாக்குதல்களுக்கும் தானே பொறுப்பானவன் என்று எழுதியிருந்தார். மேலும், தனது குறியீட்டு செய்தியை முதல் பக்கத்தில் வெளியிடாவிட்டால் மேலும் பலரை கொல்வேன் என்றும் மிரட்டினார்.
அந்த தருணத்திலிருந்தே “Zodiac Killer” என்ற பெயர் உலகம் முழுவதும் பரவத் தொடங்கியது.
மர்மமான Cipher-கள், ஏரிக்கரை தாக்குதல் காவல்துறைக்கு விடப்பட்ட பெரிய சவாலாக இருந்தது.
Cipher என்றால் என்ன?
Zodiac Killer வழக்கை மற்ற தொடர் கொலை வழக்குகளிலிருந்து முற்றிலும் வேறுபடுத்தியது அவரது Cipher எனப்படும் ரகசிய குறியீட்டு செய்திகள் தான்.
அவர் செய்தித்தாள்களுக்கு அனுப்பிய சில கடிதங்களில் சாதாரண எழுத்துகள் மட்டுமல்லாமல், ஆங்கில எழுத்துக்கள், எண்கள் மற்றும் பல்வேறு குறியீட்டு சின்னங்களை கலந்து உருவாக்கப்பட்ட புதிர்கள் இடம்பெற்றிருந்தன. அவற்றை யாராலும் உடனடியாகப் புரிந்துகொள்ள முடியவில்லை.
மொத்தம் நான்கு முக்கிய Cipher-கள் அதிகாரப்பூர்வமாக Zodiac Killer-இடமிருந்து வந்ததாகக் கருதப்படுகின்றன.
முதல் Cipher சுமார் 408 எழுத்துகளைக் கொண்டது. அது வெளியான சில நாட்களிலேயே பொதுமக்களான Donald மற்றும் Bettye Harden என்ற தம்பதியினரால் உடைக்கப்பட்டது.
அந்தச் செய்தியில், மனிதர்களைக் கொல்வதில் தனக்கு கிடைக்கும் வினோதமான மகிழ்ச்சியைப் பற்றி Zodiac எழுதியிருந்தார். ஆனால் தனது உண்மையான பெயரை அதில் வெளிப்படுத்தவில்லை.
அதன்பிறகு வந்த 340 எழுத்துகள் கொண்ட Cipher உலகின் சிறந்த குறியீட்டு நிபுணர்களுக்கே பல ஆண்டுகள் சவாலாக இருந்தது.
2020-ஆம் ஆண்டு, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மூன்று ஆராய்ச்சியாளர்கள் இணைந்து, கணினி உதவியுடன் அந்தக் குறியீட்டை வெற்றிகரமாக உடைத்தனர்.
அந்தச் செய்தியிலும் Zodiac தனது அடையாளத்தை வெளிப்படுத்தவில்லை. ஆனால் காவல்துறையையும் ஊடகங்களையும் தொடர்ந்து கேலி செய்யும் விதமான கருத்துகளை மட்டுமே பதிவு செய்தார்.
இன்றுவரை மீதமுள்ள இரண்டு Cipher-களும் முழுமையாகத் தீர்க்கப்படவில்லை.
ஏரிக்கரையில் நடந்த கொடூரத் தாக்குதல்
1969 செப்டம்பர் 27-ஆம் தேதி, Napa County பகுதியில் உள்ள Lake Berryessa ஏரிக்கரைக்கு Bryan Hartnell மற்றும் Cecelia Shepard ஆகியோர் ஓய்வெடுக்கச் சென்றிருந்தனர்.
அவர்கள் அமைதியாக அமர்ந்திருந்தபோது, திடீரென கருப்பு நிற ஆடையணிந்த, முகத்தை முழுமையாக மூடியிருந்த ஒருவர் அவர்களிடம் வந்தார்.
அவரது உடையில் வெள்ளை நிறத்தில் Zodiac சின்னம் வரையப்பட்டிருந்ததாக பின்னர் Bryan Hartnell கூறினார்.
ஆரம்பத்தில் அவர் தப்பிச் செல்ல உதவி வேண்டும் என்று கூறி அவர்களிடம் நம்பிக்கை ஏற்படுத்தினார். பின்னர் கயிற்றால் இருவரையும் கட்டிவிட்டு, எந்தவித இரக்கமும் இல்லாமல் கத்தியால் பலமுறை குத்தினார்.
Bryan Hartnell பலத்த காயங்களுடன் உயிர் தப்பினார். ஆனால் Cecelia Shepard இரண்டு நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின்னர் உயிரிழந்தார்.
இந்த தாக்குதல் முந்தைய துப்பாக்கிச் சூடு சம்பவங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டது.
இதனால் Zodiac எந்த சூழ்நிலையிலும், எந்த ஆயுதத்தையும் பயன்படுத்தத் தயங்காதவன் என்பது காவல்துறைக்கு தெளிவானது.
காவல்துறையை அதிர்ச்சியடையச் செய்த செயல்
தாக்குதல் முடிந்த பிறகு, Zodiac அருகில் இருந்த பாதிக்கப்பட்டவர்களின் காருக்குச் சென்று, காரின் கதவில் கருப்பு மார்க்கர் பேனாவால் ஒரு செய்தியை எழுதிவிட்டு சென்றார்.
அதில் முந்தைய தாக்குதல்களின் தேதிகளையும், அந்த நாளின் தாக்குதல் தேதியையும் குறிப்பிட்டிருந்தார்.
இந்தச் செய்தி, Lake Berryessa தாக்குதலையும் அதே நபரே செய்தார் என்பதை உறுதிப்படுத்தும் முக்கிய ஆதாரமாக மாறியது.
Taxi Driver Paul Stine கொலை
1969 அக்டோபர் 11-ஆம் தேதி, San Francisco நகரில் மற்றொரு அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றது.
Taxi ஓட்டுநரான Paul Stine, இரவு நேரத்தில் ஒரு பயணியை ஏற்றிச் சென்றார். இலக்கை அடைந்ததும், அந்தப் பயணி திடீரென துப்பாக்கியை எடுத்து Paul Stine-ஐ சுட்டுக் கொன்றார்.
சம்பவத்திற்குப் பிறகு, கொலையாளி அவரது சட்டையிலிருந்து ஒரு துண்டை வெட்டி எடுத்துக் கொண்டு அமைதியாக அங்கிருந்து நடந்து சென்றார்.இந்தச் சம்பவத்தை சில சிறுவர்கள் ஜன்னல் வழியாக பார்த்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
ஆனால் ஆரம்பத்தில் வழங்கப்பட்ட தவறான தகவலால், காவல்துறையினர் உண்மையான சந்தேக நபரை அடையாளம் காணாமல் விட்டதாக பின்னர் கூறப்பட்டது.பல ஆண்டுகளுக்குப் பிறகும், இந்த தவறு Zodiac Killer வழக்கில் மிகப்பெரிய தவறவிட்ட வாய்ப்பாகக் கருதப்படுகிறது.
கடிதத்துடன் வந்த அதிர்ச்சி ஆதாரம்Paul Stine கொலை நடந்த சில நாட்களுக்குப் பிறகு, செய்தித்தாள்களுக்கு மீண்டும் Zodiac-இடமிருந்து ஒரு கடிதம் வந்தது.
அந்தக் கடிதத்துடன் Paul Stine அணிந்திருந்த சட்டையின் ஒரு துண்டும் இணைக்கப்பட்டிருந்தது.
இதன் மூலம், கடிதங்களை அனுப்பியது உண்மையிலேயே கொலையாளிதான் என்பதில் காவல்துறைக்கு எந்தச் சந்தேகமும் இல்லாமல் போனது.அதன்பிறகு வந்த பல கடிதங்களில், “என்னை யாராலும் பிடிக்க முடியாது”, “நான் மீண்டும் தாக்குவேன்” போன்ற மிரட்டல்களும் இடம்பெற்றிருந்தன.
ஊடகங்களை பயன்படுத்திய ZodiacZodiac Killer வெறும் கொலைகளைச் செய்தவர் மட்டுமல்ல. மக்களின் கவனத்தை ஈர்ப்பதில் அவர் மிகவும் திறமையானவர்.ஒவ்வொரு முக்கிய சம்பவத்திற்குப் பிறகும் செய்தித்தாள்களுக்கு கடிதம் அனுப்பினார்.
சில நேரங்களில் தனது குறியீட்டு செய்திகளை முதல் பக்கத்தில் வெளியிட வேண்டும் என்றும், இல்லையெனில் மேலும் பலரை கொல்வேன் என்றும் மிரட்டினார்.
இதனால் அன்றைய அமெரிக்க ஊடகங்களில் Zodiac Killer பற்றிய செய்திகள் தினமும் வெளியாகத் தொடங்கின. மக்கள் மத்தியில் அச்சமும் ஆர்வமும் ஒன்றாக அதிகரித்தன.காவல்துறை தொடர்ந்து விசாரணை நடத்தியபோதும், ஒவ்வொரு முறையும் Zodiac ஒரு படி முன்னிலையில் இருப்பது போலவே தோன்றியது.
அதுவே இந்த வழக்கை உலகம் முழுவதும் பேசப்படும் குற்ற மர்மங்களில் ஒன்றாக மாற்றியது.முக்கிய சந்தேக நபர்கள், DNA விசாரணை மற்றும் இன்றுவரை நீடிக்கும் மர்மம்முக்கிய சந்தேக நபர் – Arthur Leigh AllenZodiac Killer வழக்கில் பல ஆண்டுகளாக நூற்றுக்கணக்கான நபர்கள் சந்தேகிக்கப்பட்டனர்.
ஆனால் அவர்களில் அதிகம் பேசப்பட்ட பெயர் Arthur Leigh Allen.1969-ல் நடந்த கொலைகளுக்குப் பிறகு, Allen-ன் சில நண்பர்கள் மற்றும் அவரை அறிந்தவர்கள் அளித்த தகவல்கள் காவல்துறையின் கவனத்தை ஈர்த்தன.
அவரிடம் Zodiac பயன்படுத்தியதாகக் கருதப்பட்ட சில பொருட்களுடன் ஒத்த பொருட்கள் இருந்ததாகவும் கூறப்பட்டது. மேலும், “Zodiac” என்ற பெயர் கொண்ட கடிகாரத்தை அவர் அணிந்திருந்ததாகவும் தகவல்கள் வெளியாகின.இந்த காரணங்களால் காவல்துறை பலமுறை அவரை விசாரித்தது. அவரது வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.
ஆனால் சந்தேகங்கள் இருந்தாலும், குற்றத்தை நிரூபிக்கும் உறுதியான ஆதாரம் கிடைக்கவில்லை.
DNA மற்றும் கையெழுத்து சோதனைகள்
Zodiac அனுப்பிய கடிதங்களில் இருந்த உறைகள் மற்றும் தபால் தலைகளில் இருந்து DNA மாதிரிகளைப் பெற காவல்துறை பலமுறை முயற்சி செய்தது.
காலப்போக்கில் DNA தொழில்நுட்பம் முன்னேறியதால், பழைய ஆதாரங்களும் மீண்டும் ஆய்வு செய்யப்பட்டன.
Arthur Leigh Allen-ன் DNA, கிடைத்த மாதிரிகளுடன் முழுமையாக பொருந்தவில்லை என்று விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதேபோல் அவரதுகையெழுத்தும் Zodiac அனுப்பிய கடிதங்களுடன் முழுமையாக ஒத்துப் போகவில்லை.
இதன் காரணமாக, Allen மீது அதிகாரப்பூர்வமாக குற்றம் சாட்டப்படவில்லை.
மேலும் சந்தேகிக்கப்பட்டவர்கள்
Arthur Leigh Allen மட்டுமல்லாமல், பல்வேறு காலங்களில் வேறு பலரும் Zodiac Killer ஆக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.
சிலர் முன்னாள் ராணுவ வீரர்கள் என்று கூறப்பட்டது. சிலர் குற்றப் பின்னணி கொண்டவர்கள் என. தனியார் விசாரணை குழுக்கள் மற்றும் எழுத்தாளர்களும் பல்வேறு பெயர்களை முன்வைத்தனர்.
ஆனால் எந்த நபருக்கும் எதிராகவும் நீதிமன்றத்தில் குற்றத்தை நிரூபிக்கும் அளவிற்கு உறுதியான ஆதாரங்கள் கிடைக்கவில்லை.
இதனால், “Zodiac உண்மையில் யார்?” என்ற கேள்வி இன்னும் பதிலின்றி உள்ளது.
B2020-ல் உடைக்கப்பட்ட 340 Cipher..
Zodiac Killer வழக்கில் மிக முக்கியமான முன்னேற்றங்களில் ஒன்று 2020-ஆம் ஆண்டு நிகழ்ந்தது.
1969-ல் அனுப்பப்பட்ட 340 எழுத்துகள் கொண்ட Cipher, சுமார் 51 ஆண்டுகளாக யாராலும் தீர்க்க முடியாத புதிராக இருந்தது.
2020-ல் அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியத்தைச் சேர்ந்த மூன்று ஆராய்ச்சியாளர்கள் இணைந்து, கணினி தொழில்நுட்பத்தின் உதவியுடன் அந்தக் குறியீட்டை உடைத்தனர்.

அதில் Zodiac, தன்னைப் பற்றி ஊடகங்களில் வெளியாகும் தகவல்களை கேலி செய்ததுடன், மரணத்தைப் பற்றிய தனது வினோதமான எண்ணங்களையும் பதிவு செய்திருந்தார்.
பலர் எதிர்பார்த்தது போல அவரது உண்மையான பெயரோ, அடையாளமோ அந்தச் செய்தியில் இடம்பெறவில்லை.
Z13 Cipher (1970)
வெறும் 13 symbols
இன்னும் முழுமையாக உடைக்கப்படவில்லை.

Symbols = AENz8K8M8tNAM
அதிகாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட கொலைகள்
காவல்துறை மற்றும் விசாரணை அமைப்புகளின் பதிவுகளின்படி, Zodiac Killer செய்ததாக உறுதிப்படுத்தப்பட்டவை:
– 5 பேர் கொலை செய்யப்பட்டனர்.
– 2 பேர் உயிர் தப்பினர்.
ஆனால் Zodiac தனது கடிதங்களில், “நான் 37 பேரைக் கொன்றுள்ளேன்” என்று கூறியிருந்தார்.
இந்தக் கூற்றை உறுதிப்படுத்தும் ஆதாரங்கள் இதுவரை கிடைக்கவில்லை. அதனால் அந்த எண்ணிக்கை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
வழக்கு இன்னும் திறந்த நிலையில்தான் உள்ளது
பல வருஷங்கள் கடந்தாலும், Zodiac Killer வழக்கு அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வரவில்லை.
புதிய DNA தொழில்நுட்பங்கள், டிஜிட்டல் பகுப்பாய்வுகள் மற்றும் பழைய ஆதாரங்கள் மீதான மறுவிசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
எதிர்காலத்தில் புதிய ஆதாரம் கிடைத்தால், இந்த மர்மம் ஒருநாள் தீர்க்கப்படலாம் என்ற நம்பிக்கை இன்னும் உள்ளது.
ஏன் இந்த வழக்கு உலகம் முழுவதும் பிரபலமானது?
Zodiac Killer வழக்கு இன்றுவரை மக்களின் கவனத்தை ஈர்க்க பல காரணங்கள் உள்ளன.
– கொலையாளி ஒருபோதும் கைது செய்யப்படவில்லை.
– காவல்துறையையும் ஊடகங்களையும் நேரடியாக சவால் செய்தார்.
– யாராலும் எளிதில் புரிந்துகொள்ள முடியாத Cipher-களை பயன்படுத்தினார்.
– பல வருஷங்களாக ஆயிரக்கணக்கானோர் அவரது அடையாளத்தை கண்டுபிடிக்க முயற்சி செய்து வருகின்றனர்.
– திரைப்படங்கள், ஆவணப்படங்கள் மற்றும் நூல்களில் இந்த வழக்கு தொடர்ந்து இடம்பெற்று வருகிறது.
இந்த காரணங்களால், Zodiac Killer வழக்கு உலகின் மிகவும் பிரபலமான தீர்க்கப்படாத குற்ற மர்மங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
முடிவுரை
Zodiac Killer வழக்கு என்பது ஒரு தொடர் கொலை வழக்காக மட்டும் பார்க்க முடியாத ஒன்று. அது குற்றவியல், உளவியல், குறியீட்டு அறிவியல் மற்றும் காவல்துறை விசாரணை ஆகிய அனைத்தையும் ஒன்றாக இணைக்கும் வரலாற்றுச் சம்பவமாக மாறியுள்ளது.
1968-ல் தொடங்கிய இந்த மர்மம், இன்று 50 ஆண்டுகளுக்கும் மேலாக கடந்த பிறகும் மக்களின் ஆர்வத்தை குறைக்கவில்லை. புதிய தொழில்நுட்பங்கள் வந்தாலும், பல விசாரணைகள் நடைபெற்றாலும், Zodiac Killer-ன் உண்மையான அடையாளம் இன்னும் உறுதியாக கண்டறியப்படவில்லை.
“Zodiac உண்மையில் யார்?” என்ற கேள்விக்கு அதிகாரப்பூர்வமான பதில் கிடைக்கும் நாள் வருமா என்பது தெரியவில்லை. ஆனால் அந்த நாள் வரும் வரை, உலகின் மிகப் பெரிய தீர்க்கப்படாத குற்ற மர்மங்களில் ஒன்றாக இந்த வழக்கு வரலாற்றில் இடம்பிடித்திருக்கும்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)
1. Zodiac Killer யார்?அவரது உண்மையான அடையாளம் இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.
2. அவர் எத்தனை பேரைக் கொன்றார்?அதிகாரப்பூர்வமாக 5 கொலைகளும், 2 பேர் உயிர் தப்பிய சம்பவங்களும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
3.Zodiac Killer இன்னும் உயிருடன் இருக்கிறாரா?இதுகுறித்து உறுதியான தகவல் எதுவும் இல்லை.4. Cipher-கள் அனைத்தும் தீர்க்கப்பட்டுவிட்டதா?இல்லை. சில Cipher-கள் மட்டுமே தீர்க்கப்பட்டுள்ளன; மற்றவை இன்னும் முழுமையாக புரிந்துகொள்ளப்படவில்லை.5. இந்த வழக்கு இன்னும் திறந்த நிலையிலா?ஆம். அதிகாரப்பூர்வமாக இந்த வழக்கு இன்னும் தீர்க்கப்படாத வழக்காகவே கருதப்படுகிறது.