D.B. Cooper மர்மம்:மாயமாக மறைந்த நபர்..
D.B. Cooper மர்மம்: விமானத்தை கடத்தி கோடிக்கணக்கான பணத்துடன் மறைந்த மர்ம மனிதர்!
விமான பயணியா? விமான கடத்தியா?
உலகத்தில் எத்தனையோ மர்ம சம்பவங்கள் நடந்தும் இதுவரை தீர்க்கப்படாத மர்மங்களில் ஒன்றாக D.B. Cooper சம்பவம் இருக்க காரணம் என்ன?
ஒரு வணிக விமானத்தை கடத்தி, பணத்தை கொள்ளையடித்து, ஆயிரக்கணக்கான அடி உயரத்திலிருந்து பாராசூட்டுடன் குதித்த அந்த நபர் தப்பித்தாரா?
அல்லது
அவர் உயிருடனாவது இருக்கிறாரா? அல்ல அந்த இரவே உயிரிழந்தாரா?
இந்தக் கேள்விகளுக்கு 50 ஆண்டுகளுக்கும் மேலாகியும் பதில் கெடச்சுதா? கிடைக்கலையா?
யார் இந்த D.B. Cooper?

1971 நவம்பர் 24 இல் “Dan Cooper” என்பவர் அமெரிக்காவின் Portland நகரிலிருந்து Seattle நகருக்கு போகும் Northwest Orient Airlines Flight 305 விமானத்தில ஏறினார்.
அவர் சாதாரண பயணியைப் போல அமைதியாக இருந்தார். முதலில் சரக்கு (scotch) வாங்கி குடிக்கிறார்.பின் சிகரெட் பிடிக்கிறார்.
(1971- இல் சிகரெட் அனுமதி இருந்திருக்கும் போல…)
கருப்பு கலர் சூட், வெள்ளை சட்டை, போட்டு யாருக்கும் சந்தேகம் வராதமாரி நடந்து கொண்டார்.
விமானத்தில் நடந்தது என்ன ?
விமானம் கிளம்பிய கொஞ்ச நேரத்திலே, விமானத்தில் வேலை பார்க்கும் பணி பெண்ணிடம் ஒரு காகிதத்தை கொடுத்தார்.
அது ஏதோ சாதாரண காகிதம் (flirt) பண்ணுவதற்காக கொடுக்கிறார் என நினைத்து பாக்கெட்டில் வைத்து சென்றார்.
பின் D.B கூப்பர் (coooer) அந்த பெண்ணை கூப்பிட்டு அதை padichu பார்க்கிறது நல்லது என சொல்ல அவுங்களும் அதை padichu பார்க்கிறாங்க..
அதுல…
“என்னிடம் வெடிகுண்டு இருக்கிறது.”என எழுதியிருந்தது
…அவர் எல்லாரும் சத்தம் போடாம அமைதியா உக்காருங்கனு சொன்னதும் அந்த பெண் நம்பமாட்டேன் என சொல்ல
அவர் தன் பையை திறந்து காமித்தார். சிவப்பு நிற சிலிண்டர்கள் wire மாட்டிய படி இருந்ததை பார்த்து பயந்து அதிகாரிகளிடம் சொன்னார்.
பின்னர் அதிகாரிகளிடம் அவர் இரண்டு லட்சம் அமெரிக்க டாலர் கேட்டார்(அன்றைய மதிப்பில் மிகப்பெரிய தொகை),
விமான அதிகாரி FBI ku தகவலை சொன்னார்.
D.B cooper எனக்கு தேவையான பணத்தை குடுங்க மக்கள் யாரையும் ஏதும் செய்ய மாட்டேன்னு இல்லேனா வெடிகுண்ட வெடிக்க வச்சுருவேன் என்னோட சேர்ந்து எல்லாரும் சாக வேண்டியதுதா அப்டின்னு சொல்றாரு..அதோடு நான்கு பாராசூட் மற்றும் எரிபொருள் நிரப்பப்பட்ட விமானம் வேணும்னு சொல்றாரு.
விமானம் Seattle ஏர்போர்ட்டில் தரையிறங்கியதும்.அவனை பிடித்து விடலாம் என போலீசு நினைக்க..
விமானம் தரையிறங்கியதும் கூப்பர் விமானத்தின் light off பண்ண சொல்கிறார்.எரிபொருள் நிரப்ப சொன்னார்.
மக்கள் எல்லோரையும் வெளிய அனுப்பி வைத்து விமான அதிகாரி மற்றும் சில பணிப்பெண்களை மட்டும் விமானத்தில் இருக்குமாறு சொல்லி..
பின் ஆயுதமில்லாத.ஒரு போலீசை கொண்டு நான்கு பாராசூட் அவருக்கு தேவையானத வாங்கிட்டு அவர் மறுபடியும் flight ✈️ take off பண்ண சொல்றார்.
மெக்சிகோ நகர் நோக்கி போக சொன்னார் அப்போ அதிகாரி மெக்சிகோ போக எரிபொருள் பத்தாது இன்னொரு தடவ எரிபொருள் நிரப்புணாதா மெக்சிகோ போக முடியும்னு சொல்ல
இன்னொரு விமான நிலையத்தைக் சொல்லி அங்கே தரையிறங்கி விமானம் எரிபொருள் நிரப்பலம்னுவிமானத்தை எடுக்க சொன்னார்.
Police இப்ப miss பண்ணிட்டோம் அடுத்த விமான நிலையத்தில் கண்டிப்பா பிடித்து விட வேண்டுமென்று இரண்டு ஜெட் விமானத்தை பின் தொடர்ந்து போக FBI ஆர்டர் போட்டது.
விமான அதிகாரி பணிப்பெண்கள் யாரும் வெளியே வரக்கூடாது என D.B cooper சொன்னார்.
நல்ல இடி மின்னலோடு மழை பெய்து கொண்டிருந்தது.
அப்போது விமானத்தை 3000 அடிக்கு மேல் போக கூடாது எனவும் 3000 அடியில் தான் மேகமூட்டங்கள் அதிகம் இருக்கும் என்பதால் அந்த மேகத்தினுள்ளே flight போகணும்னு Cooper சொன்னார்.
பின்தொடர்ந்து வந்த ஜெட் விமானங்களும் சரியா கவனிக்க முடியாத அளவுக்கு மழையும் இடியாக இருந்தது.
விமானம் போய்க்கொண்டிருந்த போது விமான பின்பக்கம் அழுத்தம் அதிகம் இருப்பதாக விமான ஓட்டிக்கு அபாயம் காமிச்சது.
அது என்னவென்று பாக்க விமான அதிகாரி வெளியே வந்து பார்த்தார்.
D.B cooper ஐ காணோம்..
அவர் விமானத்திலிருந்து குதிச்சுட்டார்
.இரவு நேரம்…
கனமழை…
பலத்த காற்று…
சுமார் ஆயிரக்கணக்கான அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்த விமானத்தின் பின்புற படிக்கட்டைத் திறந்து, பணப்பையுடன் ஒரு பாராசூட்டை அணிந்துகொண்டு அவர் இருளில் குதித்தார்.
அவர் குதித்த இடம் காடுகள் மற்றும் ஆறுகள் ஓடுகிற இடம்னு சொல்றாங்க.
அதுக்கப்புறம் அவர் யாருடைய கண்களிலும் படவில்லை.
FBI நடத்திய விசாரணை..

அமெரிக்காவின் FBI உடனடியாக மிகப்பெரிய விசாரணையைத் தொடங்கி…
ஆயிரக்கணக்கான சந்தேக நபர்கள் விசாரித்து…
காடு, மலை, ஆறுகள் என பல பகுதிகளில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு..
ஆனால் D.B. Cooper பற்றிய எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை.
கண்டுபிடிக்கப்பட்ட ஒரே ஆதாரம்..
1980-ஆம் ஆண்டு, Brian Ingram என்ற சிறுவன் Columbia ஆத்தங்கரையில் விளையாடிக்கொண்டிருந்தபோது,
அழுகிய நிலையில் இருந்த சில டாலர் நோட்டுகளை கண்டுபிடித்தான்.
அவை D.B. Cooper-க்கு கொடுக்கப்பட்ட மீட்பு பணத்தின் ஒரு பகுதி என FBI உறுதி செய்தது.
ஆனால் மொத்த பணத்தில் மிகவும் சிறிய தொகை மட்டுமே மீட்கப்பட்டது.
மீதமுள்ள பணமும், Cooper-உம் இதுவரை என்ன ஆனார் என்று யாருக்கும் தெரியவில்லை.
D.B. Cooper உயிருடன் தப்பித்தாரா?
இதுகுறித்து பல கருத்துகள் உள்ளன..
சிலர், அவர் முன்கூட்டியே திட்டமிட்டு பாதுகாப்பாக தரையிறங்கி புதிய அடையாளத்தில் வாழ்ந்திருக்கலாம் என்று நம்புகின்றனர்.
மற்றவர்கள், அந்த இரவு கடும் மழை, இருள் மற்றும் குளிர் காரணமாக அவர் குதித்தவுடன் இறந்து போயிருப்பார் என கருதுகின்றனர்.
இதுவரை எந்தக் கருத்துக்கும் உறுதியான ஆதாரம் இல்லை.
வழக்கு முடிவுக்கு வந்ததா?
FBI இந்த வழக்கை 45 ஆண்டுகளுக்கும் மேலாக விசாரித்தது.
இறுதியாக 2016-ஆம் ஆண்டு, புதிய ஆதாரங்கள் எதுவும் கிடைக்காத நிலையில் அவரை பார்த்த சில பேர் அவருக்கு 40 வயது இருந்திருக்கும் என்பதன் அடிப்படையில்
அவர் உயிருடன் இருந்திருந்தாலும் இந்நேரம் அவர் வயதாகி இறந்திருப்பார் என செயலில் இருந்த விசாரணையை நிறுத்துவதாக அறிவித்தது.
இருந்தாலும் அமெரிக்கா govt கண்ணிலேயே விரலை விட்டு ஆட்டிய அந்த கில்லாடி, அமெரிக்க வரலாற்றின் மிகப் பெரிய தீர்க்கப்படாத மர்மங்களில் ஒன்றாகவே இன்னும் இருக்கிறது.
முடிவு..
ஒரு சாதாரண விமானப் பயணியாக ஏறி, விமானத்தை கடத்தி, கோடிக்கணக்கான பணத்தை வாங்கி, வானிலிருந்து குதித்து, உலக வரலாற்றிலேயே மிகப்பெரிய மர்ம மனிதராக மாறினார்.
D.B. Cooper யார்?
அவர் உயிருடன் தப்பித்தாரா?
மீதமுள்ள பணம் எங்கே?
இந்த மூணு கேள்விகளுக்கும் இன்றுவரை யாரிடமும் சரியான பதில் இல்லை. அதுனாலதா D.B. Cooper உலகின் மர்ம நபராகவே இருக்கிறார்..
அவருக்கு என்ன ஆகியிருக்கும் என்ற உங்க கருத்துக்களை (Comments) கமெண்ட் இல் சொல்லிட்டு போங்க..